Wednesday, February 10, 2010

DAWN

வைகறை

-எழில் வேந்தன்

சுவாசத்தைச் சுத்திகரிக்கும்
சுகந்த பொழுதே,

இருளை நசுக்கும்
பன்னீர் நனைந்த பாதமே!

அடிவானில் முளைக்கும்
விடியலின் வாசலே,

இரவெல்லாம் கமழ்ந்த
இனிய மணத்தின் சேமிப்பே!

உதயத்தை விடவும்
நான்
உன்னையே நேசிக்கிறேன்.
சிறு பொழுதுதான்..
ஆனால்,
நான் சிலிர்க்கும் பொழுது நீ!

படுக்கைக் கல்லறையின்
தற்காலிக இறப்பிலிருந்து
தினம் தினம்
உயிர்க்கும் பொழுது நீ!

உன் மெல்லிய இதழ்களால்
என்
இமைகளை முத்தமிட்டு மலர்த்து!

VOICE OF THE RIVER

நதியின் குரல்
- முனைவர்.எழில் வேந்தன்


இயற்கை எழுதிய
தண்ணீர்க் கவிதை

நான்...
மண்ணின் மணக்குரலின்
திரவப் பதிவு
புவிக்கோளத்தின் புதுமை
யுகங்களைக் கடந்து நிற்கும்
அகிலத்தின் ஆயுள் ரேகை
வெளியில் மிதக்கும்
வெளிச்சப் புதையல்

எழுந்திடத் துடிக்கும்
என் அலைகள்குளிர்
ஜுவாலைகள்
உயிர்களைப் பிரசவித்திட
மண் மங்கை கருவுற்ற போது
நான் உயிரணுக்களுக்காக
ஊறிவந்த தாய்ப்பால்

நான்பிரபஞ்ச மொழியில்
பேசியதெல்லாம்
புரியாமல் போனதால்
உங்கள்
உள்ளூர் மொழியில்
உரைத்திட வந்தேன்

ஜீவ நாடியாய் செல்லத் துடித்து
கட்டாறாகக் காலம் கழித்திருந்தேன்
கரைகள் இரண்டைக்
காவலுக்கு அனுப்பினீர்கள்
கௌரவம் வந்ததாய்க்
கர்வப் பட்டால்
என்னை ஆங்காங்கேஅணைச்
சிறைகளுக்குள் அடைத்து வைக்கிறீர்கள்.

என் பார்வை முழுதும்
பள்ளங்களையே பார்த்திருக்க
மேடுகளைக் கண்டு
மிரண்டு போகிறேன்.
அருவியாய்ப் பாய்ந்து
அவ்வப்போது குதிக்கிறேன்
வரும் வழிதோரும்
பச்சைக் கம்பளப்பாய் விரிக்கின்றேன்.

உங்கள் கால்களைத் தழுவ
பூக்களைப் பரிசாகச் சுமந்து வருகின்றேன்

நீங்களோ
முட்களையே முகத்தில் வீசி எறிகின்றீர்கள்
உங்கள் அழுக்குகளை
அகற்றிட வந்த என்னை
அசிங்கங்களால் அழுக்காக்கி விட்டீர்கள்

என் உடன்பிறப்புகளின் சந்திப்புகளில்
பாதையில் நேர்ந்த துயரங்களைச் சொல்லி
தேம்பி அழுவதால்தான்...
கடல் நீர்
கண்ணீரால் கரித்து
உப்பு நீராய் உவர்த்துப் போனது.

சமுத்திர சங்கமம் என்னும்
சங்கற்பத்தில் சமரசங்களுக்கு சம்மதிப்பதில்லை...
இலட்சியங்களை
அடகு வைத்துவிட்டு
அடக்குமுறைகளுக்கு அடிபணிவதில்லை...

தாமதம் ஆகலாம்..
ஆனால் தவிர்க்க முடியாது.
எங்களைச் சூரிய நெருப்புச்
சுட்டெரிக்கிறது
மேகச் சிறகுகளைக் கட்டிக்கொண்டு
மேலே பறந்து
மழைத் துளியாக
மறுபடி உயிர்க்கிறோம்.
என் கோபத்தைக் காட்டிட
அவ்வப்போது குமுறியிருக்கிறேன்.
நீங்களோ...
நியாயங்களைத் தள்ளுபடி செய்துவீட்டீர்கள்.
தரையோடு தரையாய்
தவழ்ந்து வந்து கேட்கும்
இந்தத் தண்ணீரின்
கோரிக்கைகள் நிராகரிக்கப்படும் என்றால்
நான் ஒருநாள்
நெருப்பாக கொழுந்துவிட்டு
நிமிர வேண்டியிருக்கும்

Wednesday, August 26, 2009

The Banyan Tree


A Banyan tree I am,
a marvellous one at that.
This gigantic form
have I taken
out of a very tiny seed
like an atom's mighty power.

Grown on the bloody mire of sacrifice
and watered by human tears,
my branches leap boundaries
and extend as my vision goes on.

I am the refuge for birds
longing for shade
from my ever-green branches
and the exquisite taste of my fruit.

Varied indeed are the languages
of the varied species of birds
of many a hue,
but the thought that inspires the song
is the same for ever and ever.

I'm the tent,
where birds that toil and moil all day revel.
On my branches gets inaugurated
each season of festivity.

My Veda of eternal relevance is Truth;
I preach Love and Peace,
the time-tested ideals.

The branches of my ideals
do not allow
the birds of prey
even to sit on me;
not to speak of them
building nests on me.
Strictly, no permission for the birds
even if they pay a fee.

Having a never-drying milk-spring in me
I grow even on barren soil,
I am the gift of this soil.

Some birds that taste my fruit
drop their excrement
elsewhere.

Some try to find fault
with my lisp of fledglings;
clip their wings
just beginning to grow.

Some others
praise the charm of birds,
a little nature,
tell them temptingly thus:
"Let us sit on tall branches of other trees
and be gay and carefree."

I am unable to excuse the woodpeckers;
do they not rejoice in disrobing me?

Creating holes in me,
the woodpeckers,
only invite vicious vipers to settle in me.

A poor, pitiable tree I am,
Giving away fruit only to songbirds.

My roots
labour without rest
going deep down into the soil
seeking water.

Bitter may be my seeds
but sweet are my fruits.


My body suffers
a thousand wounds
from head to foot.
Don't you notice my eyes watering
as the pungent smell of Sulphur
affects me ?

Inexplicable are my trials and tribulations
in the cycle of time;
in the annals of history
I am a tree of achievements.

I have no chance of being flexible
like a plantain tree.
Storms wail to me
that they are unable to uproot me.

My roots are only aerial roots
which are not being closed
allow light to pass through them.

They will soon take root
and stand majestically !

A Banyan tree I am,
a marvellous tree.

Dr.Ezhilvendan

Dr.Ezhilvendan is a multi faceted personality - Bilingual Poet, Writer, Lyricist, Journalist, Dramatist, Orator, Lawyer, Researcher and Social Activist.
He is the author of two published poetry collections in Tamil. His latest collection of Tamil poems ‘Velichcha Vizhudhugal’ with forewords by former Vice Chancellor of Madras University and eminent Linguistic Dr.Porkko and Modern Tamil Poetry Critic Dr.C.E.Maraimalai was published in December 2001. His first poetry collection 'Paadhai Oraththu Paarijaathangal' with a foreword by Prof.Solomon Papaiya was published in November 1989.


An award-winning poet, his poem 'Aalamaram' (The Banyan Tree) was adjudged as the best poem from Tamil to represent in the Republic Day National Symposium of Poets - 1995 held in New Delhi. The poem has been translated into all the eighteen National languages of India and broadcast by all the stations of All India Radio immediately after the Indian President's Address to the Nation on the eve of Republic Day on 25.1.1995.
He has been awarded 'Bharathy Pattayam' for his instantantaneous poem on Bharathy in the Poet Bharathy Centenary Celebrations organised by the State Government of Pondicherry. The poet was honoured by the then Speaker of Indian Parliament on 11.12.1981. His poem 'Eri Malayai Santhehikkalaamaa' a poem on the evolution of Tamil Pudhu Kavithai, (Tamil Modern Poetry) was selected as one of the best ten modern poems for prize by leading Tamil weekly 'Aanandha Vikatan'.
He has been conferred with many Awards and Titles of appreciation for his service to Tamil Literature. Some of them are:
  • 'Kavignar Thilakam' awarded by Poet Meenavan Ilakkiya Peravai in 1986 at Nagappattinam presented by Poet Meenavan
  • 'Ezhuchchi Kavignar' awarded by Paavendhar Tamil Peravai in 1989 at Thanjavur presented by Literary Critic Bharathi Piththan
  • 'Dr.Ambedkar Centenary Best Orator Award' by the Ministry of Telecommunications in 1992 in Chennai presented by Justice.V.R.Krishna Iyer, former Justice of Supreme Court of India
  • 'Bharathy Pannichchelvar' awarded by All India Tamil Writers Association in 1996 at Ettayapuram presented by Writer Vikraman
  • 'Thirukkural Maamani' awarded by World Thirukkural Association in 2007 at Chennai Villivakkam presented by Pulavar Arivudai Nambi
Dr. Ezhilvendan has a Doctorate in Political Science and Public Administration awarded by the University of Madras, Master Degree in Political Science, Bachelors Degree in Law and Post-Graduate Diploma in Personnel Management and Industrial Relations. His research papers have been selected for presentation in Seminars in Indian Universities including Jammia Millia Islamia Central University, New Delhi. His articles regularly find place in Print, Visual and Electronic Media. He is from a remote village in Tamil Nadu born to illiterate agriculture labourers. He lives in Chennai city in India. He can be contacted through his email address: dr.ezhilvendan@gmail.com


கவிஞர்,ஆய்வாளர்,எழுத்தாளர், வழக்கறிஞர், சமூக ஆர்வலர். அரசியல் அறிவியல் மற்றும் பொது நிர்வாகவியலில் முனைவர் பட்டம், சட்டவியலில் இளம்கலை பட்டம் பெற்றுள்ளேன். ' பாதையோரத்துப் பாரிஜாதங்கள் ' மற்றும் ' வெளிச்ச விழுதுகள் ' இரண்டு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி புது டில்லியில் இந்திய அரசு நடத்தும் ' தேசிய பன்மொழிக் கவியரங்கத்தில் ' பங்கேற்க 1995 ஆண்டுக்கான சிறந்த தமிழ்க் கவிதையாக என் கவிதை 'ஆலமரம்' தேர்ந்தெடுக்கப் பட்டது. (ஒவ்வொரு மொழியிலிருந்தும் ஒரு கவிதை மட்டுமே).அக்கவிதை பதினெட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பல்கலைக் கழகங்களும் கலை இலக்கிய அமைப்புகளும் நடத்தும் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான கருத்தரங்கங்களில் ஆய்வுரைகள் நிகழ்த்திவருகிறேன்.மனித உரிமைகள், பெண்ணுரிமை, குழந்தைகள் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் சமூகவியல் ஆகிய தளங்களில் பார்வையும் பணியும்.
பிரபஞ்சக் கோள்கள் எதனிலும்
எங்கும்
எவரையும்
பிணித்த தளைகள் யாவையும்
பொடிப் பொடியாக்கி
புதிய யுகத்தினை கொணர்ந்திட வேண்டும்.