Wednesday, February 10, 2010

DAWN

வைகறை

-எழில் வேந்தன்

சுவாசத்தைச் சுத்திகரிக்கும்
சுகந்த பொழுதே,

இருளை நசுக்கும்
பன்னீர் நனைந்த பாதமே!

அடிவானில் முளைக்கும்
விடியலின் வாசலே,

இரவெல்லாம் கமழ்ந்த
இனிய மணத்தின் சேமிப்பே!

உதயத்தை விடவும்
நான்
உன்னையே நேசிக்கிறேன்.
சிறு பொழுதுதான்..
ஆனால்,
நான் சிலிர்க்கும் பொழுது நீ!

படுக்கைக் கல்லறையின்
தற்காலிக இறப்பிலிருந்து
தினம் தினம்
உயிர்க்கும் பொழுது நீ!

உன் மெல்லிய இதழ்களால்
என்
இமைகளை முத்தமிட்டு மலர்த்து!

No comments:

Post a Comment